பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு…
வேலூர் மாவட்டம் ஓட்டேரியில் முத்தரங்கம் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மாணவ மாணவியர்கள் தமிழக அரசு பேருந்து கட்டணம் உயர்தியதை கண்டித்து இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்ட மாணவ மாணவிகளிடம் சாலைமறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்படுவதுடன் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதால் கலைந்து செல்ல போலீசார் வற்புறுத்தினர். ஆனால் போலீசாரின் பேச்சை மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார் மாணவர்களை கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Des : The police are trying to dissuade the college students who were involved in the road accident