சென்னையில் ரயிலில் கத்தி அரிவாளுடன் மாணவர்கள் வன்முறை வெறியாட்டம்- வீடியோ

2018-01-30 1

அரக்கோணம் மின்சார ரயிலில் வந்த மாணவர்கள் வன்முறை, அரிவாள், கத்தியால் விரட்டி விரட்டி வெட்டியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடனும், வாள்போன்ற நீண்ட அரிவாளுடனும் விரட்டி விரட்டி வெட்டினர்.

இதைப்பார்த்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் எற்பட்டுள்ளது. ஆயுதம் கொண்டு வந்த மாணவர்கள், ஒரு பெட்டியில் இருந்த மாணவர்கள் துரத்தி துரத்தி வெட்டினர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

5 students injured and passanger affected, today College students brandish lethal weapons on Chennai suburban trains.

Videos similaires