சோப்பு போட்டு குளிக்கும் எலி- வீடியோ

2018-01-30 7

மனிதர்களைப் போன்று எலி ஒன்று சோப்பு போட்டுக் குளித்த வீடியோ வைரலாகியுள்ளது. பெரு நாட்டின் ஹுவாரஸ் நகரத்தை சேர்ந்தவர் ஜோஸ் கோரியா. டிஜெவான இவர் வழக்கம்போல் குளிப்பதற்காக தனது வீட்டு குளியலறைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஸிங்கில் எலி ஒன்று சோப்பு நுரையை தன்மீது பூசி குளிப்பதை பார்த்த அவர் ஷாக்கானார். மனிதர்களைப் போலவே கை கால்களையெல்லாம் சோப்பு போட்டு தேய்த்து குளித்தது அந்த எலி.

இதனைக் கண்டு வியந்துபோன ஜோஸ் கோரியா உடனடியாக தனது போனில் எலி குளிப்பதை வீடியோ எடுத்தார். எலியின் பிரைவெசி பாதிக்கக்கூடாது என்று நினைத்த அவர் எலிக்கு தெரியாமலே அதுகுளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோரியா சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். தற்போது வரை இந்த வீடியோவை 40 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
30 வினாடிகளுக்கும் மேலாக அந்த எலி சோப்பு போட்டு குளித்துள்ளது. குளித்தவுடன் எலி ஓட்டம் பிடித்துள்ளது.

A rat taking bath like human being in Peru. This Rat bathing video became viral on social medias.

Videos similaires