தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலன் கருதி, வரும், 30ம் தேதி, ஆதரவாளர்கள் கொண்டாடும், தன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்காமல், வெளிநாடு சென்றிருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி
ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை ஒட்டி, மதுரையில் உள்ள தயா திருமண மண்டபத்தில், தொண்டர்களை சந்தித்து, வாழ்த்துகளை பெறுவார் அழகிரி. அப்போது, கேக் வெட்டி, கிடா வெட்டி, தொண்டர்களுக்கு, தடபுடல் விருந்து அளிக்கப்படும். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பின், பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திற்கு, அழகிரி முக்கியத்துவம் தருவதில்லை.
வரும், 30ம் தேதி அவருக்கு பிறந்த நாள். அன்று, தன் ஆதரவாளர்கள் கொண்டாடும், ஆடம்பர பிறந்த நாள் விழாவில் பங்கேற்காமல், வெளிநாடு சென்றிருக்கிறார் அவர். இந்நிலையில் அழகிரியில் பிறந்த நாளை போஸ்டர்கள் ஒட்டி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
mk alagiri's birthday posters banners in madurai