வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் மூழ்கியதால் மனைவியை கொன்ற கணவர்- வீடியோ

2018-01-30 1

மேற்கு வங்க மாநிலம் ,கொல்கத்தாவில் பல இரவுகள் தனக்கு உணவு கூட அளிக்காமல் வாட்ஸ் ஆப்பே உலகம் என்றிருந்த மனைவி மீது சந்தேகம் அடைந்து கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர். கொல்கத்தாவில் சேட்லா எனும் இடத்தில் ஹௌரா ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் சுராஜித் (42). இவரது மனைவி தும்பா பால் (36). இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். தும்பா பால் எந்த நேரமும் தனது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட்டு கொண்டிருப்பார். இதை கணவர் சுராஜித் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

இந்நிலையில் தும்பா பால் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சுராஜித்திடமும் விசாரணை நடைபெற்றது.

வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல் செட்டப் செயவதற்காக துணி ஒன்று இருந்தது. தும்பா பால் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததால் இந்த செட்டப்பை பார்த்த போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் சுராஜித்தின் கைகளிலும் காயம் இருந்தது.




Police have arrested the husband Surajit Pal of homemaker Tumpa Pal, who was found murdered inside her rented residence in Chetla as he suspects his wife having an extra-marital relationship and that she was spending a lot of time on social media.

Videos similaires