பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையனுக்கு அரசியல் தெரியாது என்று காங்கிரஸ் விழா ஒன்றில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கோபி நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசுகையில், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் செல்வதிலேயே குறிக்கோளாக உள்ளார். நாட்டு மக்களின் கஷ்டங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் மக்கள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையை சமாளிக்க முடியாமல் துன்பம் அனுபவித்து வருகின்றனர். ஜி.எஸ்.டி போன்ற வரிகளை விதித்ததால், ஏழை, எளிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக எம்.பி.,க்களும் தமிழக மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. இங்கு இருப்பதோ ஓட்டை உடைசல் பேருந்துகள் தான். ஆனால், பேருந்து கட்டணம் விஷம் போல் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
TN Ministers are Unaware of Politics says EVKS Elangovan. Former Congress state Committee Leader EVKS Elangovan says that Tamilnadu is witnessing a Bad Political Examples.