அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டு விழா- வீடியோ

2018-01-30 15,909

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்து விழா மிக பிரம்மாண்டமாக இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் 2 கோடி அளவிற்கு மொய் பணம் வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை பக்கத்தில் காது குத்து, கிடா வெட்டு என்றால் தாய்மாமன் வீட்டு சீர் வரிசை களைகட்டும். அதுவும் அமைச்சர் வீட்டு விசேசம் என்றால் கேட்கவா வேண்டும். ஞாயிறன்று மதுரையே திருவிழாக்கோலம் பூண்டது. சீர் வரிசை தட்டுக்கள் களை கட்டின. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு விசேசத்தில் பங்கேற்றவர்கள் கொண்டு வந்த சீர் வரிசையை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர். மாலை அணிவித்து பரிசுப்பொருட்களை கொடுத்தனர்.

காது குத்து விழா என்றாலே கிடா வெட்டு அசைவ விருந்து களை கட்டும். அதுவும் அமைச்சர் வீட்டு விஷேசத்தில் கேட்கவா வேண்டும். வந்திருந்த அனைவருக்கும் கிடா வெட்டு விருந்து, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

"Moi" collection was huge in the Minister Sellur Raju family kathu kuthu function, say sources from Madurai.

Videos similaires