மேற்குவங்கத்தில் பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காலை 6 மணிக்க பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூர்ஷிதாபாத் என்ற இடத்தில் பாலத்தின் மீது பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்தது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சிறிய படகுகள் மூலம் பேருந்தில் சிக்கியிருந்தவர்களையும் கால்வாய்க்குள் மூழ்கியவர்களையும் மீட்டனர். இருப்பினும் இந்த கோரவிபத்தில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மூர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பாரம்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் ஆர அமர தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.
Atleast 32 people died in the bus accident in West bengal. Bus fall down in a canel with ove 50 passengers at mushidabad.