சோடா பாட்டில் யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும்

2018-01-29 388

சோடா பாட்டில் எல்லாரும் வீசுவார்கள் ஆனால், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிளைப்பாளர் சீமான் பேசி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல்லில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசின் பேருந்து கட்டணக்குறைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், கடந்த வாரம் தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணம் சுமார் 100 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலையில், அதை குறைக்கும் போது மட்டும் 2 காசு, 5 காசு என்று குறைத்து கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மக்களை இந்த அரசு கேவலப்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், சோடா பாட்டில் எல்லாரும் வீசுவார்கள். ஆனால் யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும். ஆனால், ஜீயர் மன்னிப்பு கேட்டுவிட்டதால், இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று சீமான் குறிப்பிட்டார்.



Seeman condemns Government action Bus Fare Hike. He also added that We have to wait and watch What Rajini and Kamal has to do in Politics.

Videos similaires