பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்று பிரதமரானார் மோடி. மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் பிரதமர் மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது அபூர்வமான ஒன்றானதாகவே இருந்து வருகிறது.
சட்டசபை தேர்தல் காலங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி தருவதையும் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும்போது ஓரிரு வரிகள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசிவிட்டு செல்வார் பிரதமர் மோடி. ஆனால் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வராது.
மத்திய அரசு மீதான ஏராளமான விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தபோதும் பிரதமர் வெளிநாடு பயணங்களில்தான் கவனம் செலுத்துகிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
According to the sources the BJP is planning for early the Lok Sabha elections.