மறுமணம் என்ற பெயரில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய மோசடி மன்னன் புருஷோத்தமனை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் இன்றைக்கு தில்லாலங்கடி செய்து ஏமாற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். சமீபத்தில் கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ருதி கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது பெண்களை ஏமாற்றிய புருஷோத்தமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்தமனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். இரண்டாவது திருமணம் என்ற பெயரில் இவர் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் குமுத வள்ளி, கணவரை இழந்த இவர் காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமண தகவல் மையம் மூலமாக வெள்ளலூரை சேர்ந்த புருசோத்தமனை சந்தித்தார். புருஷோத்தமனுக்கு பெண்களை ஏமாற்றுவதுதான் பிரதான தொழில். இதற்கு திருமண தகவல் மையத்தினரும் உடந்தை.
Police arrested B Purushothaman of Vellalore in connection with cheating case and many wives later, he found himself richer Rs 4.5 crore