ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. நேற்று பஞ்சாப் அணி எப்படி எல்லோரையும் எடுத்ததோ அப்படித்தான் இன்று பெங்களூர் அணி தீயாக வேலை செய்கிறது. எல்லா வீரர்களையும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக இளம் வீரர்களை அணிக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே முருகன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அந்த அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போது முகமது சிராஜ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தெலுங்கானாவை சேர்ந்த இவர் 2015 இறுதியில் ஹைதராபாத் ரஞ்சி அணிக்காக விளையாடினார். மிகவும் சிறப்பாக பந்து வீச கூடிய இவர் இந்த வருட ரஞ்சி போட்டியில் மிக அதிகமான விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வீரர்கள் பலர் அதிகமா இந்த அணியில் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். முருகன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் ஏற்கனவே எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே கோஹ்லி, ஏபி டி என்ற உலகின் தலை சிறந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள் போக மெக்குலம், சர்ப்ராஸ் கான் ஆகியோர் உள்ளனர்.