இந்த வருடம் (2018) ஐபிஎல் ஏலத்தின் முதல் நாளில் அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார் பென் ஸ்டோக்ஸ். இவர் ரூ.12.5 கோடி விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு ரூ.14.5 கோடிக்கு புனே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே கோஹ்லிதான் அதிகபட்ச விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர். பெங்களூர் அணி அவரை ரூ.17 கோடி கொடுத்து தக்க வைத்துக் கொண்டதுதான், இதுவரையில் காஸ்ட்லி சாதனையாக உள்ளது.
இன்றைய ஏலத்தில் 2வது காஸ்ட்லி வீரர் என்ற பெருமை கே.எல்.ராகுலுக்கு கிடைத்துள்ளது. அவரை பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. நடப்பு தென் ஆப்பிரிக்கா தொடரில் ராகுல் சொல்லிக்கொள்ளும்படி ரன் குவிக்கவில்லை என்றபோதிலும், அவருக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளது பஞ்சாப்.
ராகுலை போலவே மற்றொரு கர்நாடக வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் அடித்தது லக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. முன்னதாக மும்பை மற்றும் கொல்கத்தாவுக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் அவர்.