தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி

2018-01-28 324


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்ட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. கேப்டவுன் மற்றும் செஞ்சூரியனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து ஜோகன்னஸ்பர்க்கில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 187 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா 194 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஜோகன்னஸ்பர்க் மைதானம் இந்திய வீரர்களை படாதபாடுபடுத்தியது. இருப்பினும் சமாளித்து 2-வது இன்னிங்ஸில் 247 ரன்கள் குவித்தனர்.

இதனால் தென்னாப்பிரிக்கா வெல்ல 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா வீரர்களால் நிலைத்து நிற்க முடியாத நிலையில் மைதானத்தில் பந்து தாறுமாறாக பாய்ந்தது. இதனால் ஆட்டம் நேற்று பாதிக்கப்பட்டது.