சாய்ராம் கல்லூரியில் கமல் பேச்சு

2018-01-27 2

மது விற்கும் அரசு திருடன் என்றும் மது விற்பது தான் அரசின் வேலையா என்றும் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தரமான கல்வி, சுகாதாரம் வழங்குவதே அரசின் கடமை என்றும் கமல் சுட்டிக்காட்டியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கு மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் தனது அரசியல் பயணம் மற்றும் தான் முன் எடுக்கப் போகும் விஷயங்கள் என்ன என்பதை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து மாணவர்களின் கேள்விகளுக்கும் கமல் பதில் அளித்தார். மாணவர்கள் தான் நாளைய தலைவர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக இந்த கலந்துரையாடல் அமைந்தது. மாணவர்களின் கேள்விகளுக்கு கமல் அளித்த சில உத்வேக பதில்கள் இதோ:

கல்வி என்பது மிக முக்கியமான விஷயம். ஒவ்வொரு அரசியல்வாதியும் ஏழ்மையை ஒழிப்பதாக உறுதி கொடுத்தனர், ஆம் அவர்கள் தங்களிடம் இருந்த ஏழ்மையை ஒழித்தனர். ஆனால் மக்களின் ஏழ்மை அகற்றப்படாமலே இருக்கிறது. ஏழ்மையை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் சுவிட்சர்லாந்து வங்கிக் கணக்கில் பணத்தை பத்திரமாக போட்டு வைத்துள்ளனர்.

நேர்மை என்பது எளிதில் கிடைக்கக் கூடிய விஷயம் தான், ஆனால் அதற்காக நாம் நிறைய தியாகங்களை செய்ய வேண்டும். நேர்மையாக இருக்க நான் சில தியாகங்களை செய்திருக்கிறேன். நேர்மையாக இருக்க முடியுமா என்று எப்போதுமே கேள்வி எழுப்பாதீர்கள், ஏனென்றால் நேர்மையாக இருக்க முடியும்.


Actor Kamalhaasan interacts with students at Chennai and criticises the government which is selling alcohol is a robber, neither providing good education and health services.

Videos similaires