ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. வீரர்கள் பலரும் அனைத்து அணியாலும் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். சென்னை அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருக்கிறது. அஸ்வினை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடியாமல் போனதால் மாற்று பவுலர்களை எடுத்து இருக்கிறது. முக்கியமாக முதல்முறையாக ஹர்பஜன் சிங்கை அணியில் எடுத்துள்ளது. ஹர்பஜன் தற்போது அதுகுறித்து டிவிட் செய்துள்ளார்.
2 கோடிக்கு ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரது குறைந்தபட்ச தொகை 2 கோடி ஆகும். அஸ்வினுக்கு பதில் இவர் ஸ்பின் பவுலாராக இருப்பார்.
இதுகுறித்து ஹர்பஜன் டிவிட் செய்துள்ளார். அதில் ''வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு'' என்று குறிப்பிட்டுள்ளார்.