ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். சென்னை அணி இவரை வாங்க தவறிவிட்டது. முக்கியமாக சென்னை அணி தனக்கு இருந் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதுகுறித்து அவர் டிவிட் செய்துள்ளார்.
அஸ்வின் தனது டிவிட்டில் ''கேசினோ தான் எப்போதும் ஏலத்தின் வீடு. கிங்ஸ் லெவன் அணிக்கு சென்றது மகிழ்ச்சி. இதுதான் என் புது வீடு. சென்னை அணிக்கு நன்றி. அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி'' என்றுள்ளார்.
இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதில் அளித்து இருக்கிறது. அதில் ''ஒரு சிறந்த அணியில் இருந்து அடுத்த சிறந்த அணிக்கு சென்றுள்ளீர்கள். அஸ்வின் வாழ்த்துக்கள். அனைத்து நினைவுகளுக்கும் விசில் போடவும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.