பத்ம விருது விஜயலக்ஷ்மி மற்றும் நாகசாமிக்கு வழங்கப்பட்டதன் பின்னணி என்ன?- வீடியோ

2018-01-26 2

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் அதை பெற்ற இருவரின் பின்புலம்தான் சர்ச்சையின் மைய வேராக மாறியுள்ளது. சர்ச்சைகளுக்கும், தமிழகத்திற்கும் சமீபகாலமாக ரொம்பவே தொடர்பு உள்ளது. ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியானால் ஒரு சர்ச்சை, தெர்மாக்கோல் போன்ற புது திட்டங்களால் சர்ச்சை, திட்டங்களை வாபஸ் பெற்றால் அதிலும் சர்ச்சை, கருத்தரங்கில் பேசினால் சர்ச்சை, உட்கார்ந்திருந்தால் சர்ச்சை என சர்ச்சை மயமாகிவிட்டது தமிழகம்.

இந்த சர்ச்சைகளுடன் இப்போது மற்றொரு சர்ச்சையும் உலவுகிறது. அதுதான் பத்ம விருதுகள் தொடர்பான சர்ச்சை.
தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர் நாகசாமி, பிரபல கிரிக்கெட் வீரர் டோணி, பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர் பங்கஜ் அத்வானி உள்ளிட்ட 9 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த கிராமிய பாடல் இசை கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையைச் சேர்ந்த 98 வயதான யோகா பயிற்சி நிபுணர் நானாம்பாள், வனவிலங்கு பாதுகாவலர் ரோமுலஸ் விட்டாகர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு உள்ளது.

Controversy erupt over the Padma Awards announced by the Central Government.

Videos similaires