18 ஆயிரம் அடி உயரத்தில் 30 டிகிரி குளிரில் கோடி ஏற்றிய இந்திய படை-வீடியோ

2018-01-26 707

நாடு முழுக்க 69வது குடியரசுத் தினம் மிகவும் கோலாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இந்திய-திபெத் எல்லையில் எல்லை பாதுகாப்பு போலீஸ் கொடி ஏற்றி இருக்கிறது. மிகவும் அதிக உயரத்தில் கொடி ஏற்றி சாதனை படைத்து உள்ளனர். இதை தற்போது அவர்கள் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோவிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய திபெத் எல்லையில் இந்தியாவின் போலீஸ் படை பாதுகாப்பிற்கு இருக்கிறது. 9000 அடியில் இருந்து 18 ஆயிரம் அடி வரை இவர்கள் பல்வேறு உயரங்களில் பாதுகாத்து வருகிறார்கள். மைனஸ் 40 டிகிரி குளிர் வரை இவர்கள் தாங்க வேண்டும். ஐந்து மாநிலங்களை இவர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.

இந்த நிலையில் இந்த போலீஸ் படை எல்லையில் கொடி ஏற்றி இருக்கிறார்கள். 18 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 30 டிகிரி குளிரில் மலை மீது கொடி ஏற்றி இருக்கிறார்கள். இதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

India's 69th Republic day celebrates today. On the occasion of the Republic Day of Indo Tibet border, Indo Tibetan Border Police hoists Indian flag at 18000 ft. This celebration video got viral in social media.

Videos similaires