பாலிவுட்டில் அறிமுகமாகும் சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான்- வீடியோ

2018-01-26 2,381

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து பாலிவுட்டில் அபிஷேக் கபூர், 'கேதர்நாத்' என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர் அஸ்தோஷ் கவுரிகர் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை பொழிந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் 'கேதார்நாத்' படம் உருவாகிறது.


Abhishek Kapoor is directing 'Kedarnath' in Bollywood. In the film, Saif Ali Khan's daughter Sara Ali khan is introduced in Bollywood. Sara Ali Khan is said to be committed in another film before filming his first film 'Kedarnath'.