ரஜினியும் கமலும் தெருவுக்கு இறங்கி வந்தால் தான் உண்மை நிலை தெரியும். இப்போது அவர்கள் குறித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டு உள்ளார். மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வரை சுருட்டுவதிலேயே அதிமுக அரசு உள்ளது என்று கோவை விமான நிலையத்தில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
காஞ்சி விஜயேந்திரருக்கு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க உடலில் வலுவும், உள்ளத்தில் உணர்ச்சியும் இருந்திருக்கின்றது எனவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது உள்ளத்திலும் உணர்விலும் வலு இல்லாமல் போனது எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இதற்கு காஞ்சி சங்கர மடம் தரும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தமிழுக்கு காஞ்சி மட விஜயேந்திரர் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான் எனவும் தெரிவித்தார்.
Rajini and Kamal should come to streets to Become Perfect Politicians says DMK Duraimurugan. He also added that the Government is like a Puppet Show these days.