அச்சமில்லை அச்சமில்லை ஆடியோ லாஞ்சில் யுவன் பேசியதாவது, "இந்த காலத்துக்கு ஏத்தமாதிரி டைட்டில் அமைச்சிருக்காங்க படத்துக்கு. இதை பிளான் பண்ணி பண்ணுவாங்களா இல்ல இயல்பா நடக்குதானு எனக்கு தெரியல. இந்த படத்துல நடித்த வேலை செய்த அணைத்து பட குழுவினருக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்கள் படம் வெற்றி அடைய. குமார் என்னுடன் 15 வருடமா வேலை செய்திருக்கார். நான் கடைசி 20 ஆண்டுகாலமா இசை அமைக்கறேன். 15 வருடமா என் கூட இந்த பயணத்துல இருக்கார். அவருடைய அப்பா பல காலமா படத்துல தபலா வாசிக்கறவரு. அவருக்கு சரியான ஒரு இண்ட்ரொடக்ஷன் குடுக்கணும். அவரு முதல் முறையா இசை அமைச்சிருக்கார். வாக்குப்பழித்த அமீருக்கு நன்றி. இந்த படம் கண்டிப்பா மக்களுக்கு புடிக்கும்னு நான் நம்பறேன். நன்றி. வணக்கம்.