உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு மூச்சு திணறல் காரணத்தால் இன்று உயிரிழந்தார்.
உடுமலைபேட்டை சங்கர்ரும் கவுசல்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் கொலை செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு கடந்த 1 வருடமாக திருப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை வழக்கி தீர்பளித்தார். கடந்த சில தினங்களாவே நீதிபதி அலமேலு மூச்சு திணரலால் அவதிபட்டு வந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மூச்சு திணறல் அதிகரிக்க அவர் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். திருப்பூர் நீதிமன்றத்தில் அனைவரிடமும் அன்பாக பழக்க கூடியவர் நீதிபதி அலமேலு என்றும் அவரது மரணம் தங்களுக்கு அதிர்சியடைய செய்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.