விமல் மீது தயாரிப்பாளர் போலீசில் புகார்- Filmibeat Tamil

2018-01-25 1

நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கணேசன் புகார் அளித்துள்ளார். விமல் நடித்துள்ள மன்னர் வகையறா படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் கவுரவத் தோற்றத்தில் ஜூலி நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கணேசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோவும் நடத்தி வருகிறேன். ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Mannar Vagaiyara producer Ganesan has given a complaint against hero Vimal in the Chennai police commissioner office. He said Vimal cheated him of Rs. 2.15 crore in connection with the movie.

Videos similaires