ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் பவன் கல்யாண் மீது செருப்பு வீசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் ஜனசேனா கட்சியை துவங்கியுள்ளார். நடிப்பு தொழிலை விட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் பவன் கல்யாண் மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று தெலுங்கானா மாவிலம் கொத்தகூடத்தில் இருந்து கம்மம் மாவட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கல்யாண் மீது செருப்பை வீசியுள்ளார். மர்ம நபர் விசிய செருப்பு கல்யாணின் முகத்தில் பட்டு காரின் மேல் விழுந்தது. கல்யாண் மீது செருப்பை வீசிய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர் மன்றத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கிருந்து கல்யாண் உடனே வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் சிரஞ்சீவி என்பவர் மீது மோதியதில் அவரது கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Des : In a crowd of fans, the incident happened on Telangana in the footsteps of actor Bhawan Kalyan.