60 வயது மூதாட்டியை கொடூரமாக சுட்டுக்கொன்ற கும்பல்- வீடியோ

2018-01-25 1

60 வயதான மூதாட்டியை 3 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமே இல்லாமல் கொடூரமாக சுட்டுக் கொன்ற செயல் உத்தரப் பிரதேச மாநிலத்தை அதிர வைத்துள்ளது. அந்த மூதாட்டியின் மகனையும் அக்கும்பல் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பியது. இந்த சம்பவத்தைத் தடுக்கத் தவறிய செயலுக்காக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உ.பியின் மீரட் அருகே உள்ள ஒரு கிராமத்தில்தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. கட்டிலில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியின் முகம், மார்பு, தலையில் வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள்.

கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் பெயர் நிச்சேத்தார் கெளர். இவரது மகன் பல்வீந்தர். நிச்சேத்தாரின் கணவர் கடந்த 2016ம் ஆண்டு நிலப் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் நிச்சேத்தாரும், பல்வீந்தரும்.

இந்தக் கொலை தொடர்பாக நிச்சேத்தாரின் உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலை வழக்கு இன்று கோர்ட்டுக்கு வருகிறது. இதில் இருவரும் சாட்சியம் அளிக்கவிருந்தனர்.