அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை விவாதிக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.
TN Opposition leader M.K.Stalin urges to call for urgent assembly session to discuss about the bus fare hike because due to people protest all around tamilnadu the situation become sensational now he adds.