தினகரன் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டிஸ்- வீடியோ

2018-01-24 340

அதிமுக அம்மா பெயரில் குக்கர் சின்னத்துடன் தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனுமதிக்க கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் போட்டியிடுவதற்கு அனுமதி தரக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் நேற்று மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக அம்மா அணி என்ற பெயர் மற்றும் குக்கர் சின்னத்துடன் செயல்பட தாம் விரும்புவதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தில் தனி அணியாக தாங்கள் செயல்பட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Delhi high court notice to Election commission on the Dinakaran case. DTV Dinakaran filed a petition in the Delhi High Court seeking permission to contest in the local body elections with ADMK Amma and cooker symbol

Videos similaires