முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சசிகலா காலில் விழும் நேரம் வரும் என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்து உள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானதை தொடர்ந்து டி.டி.வி தினகரன் தமிழகமெங்கும் மக்களை சந்தித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதியில் கோவையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கோவையில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளரும், தற்போது டி.டி.வி தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, எங்களுடைய அணியின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. காக்கி சட்டையை போட்டுக்கொண்டு அமைச்சர்களுக்கு ஜால்ரா அடிப்பதை காவல்துறை கைவிடவேண்டும். மீண்டும் காலச்சக்கரம் சுழலும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசி உள்ளார்.
மேலும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாவினால் முதல்வர் ஆக்கப்பட்டோம் என்பதை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட வேண்டாம். கட்சியும், ஆட்சியும் விரைவில் எங்களிடம் வந்து சேரும். அப்போது இதே முதல்வர் மீண்டும் சசிகலா காலில் விழ வேண்டிய நேரம் வரும். அப்போது இந்த ஜால்ரா கூட்டம் எங்கே போகும் ? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
PM Modi is not interested to meet EPS or OPS says TTV Dhinakaran supporter Pugazhendhi. He also added that Modi came to know the power of TTV Dhinakaran in Tamilnadu.