தண்டவாளத்தில் படுத்து சாகசம் செய்த காஷ்மீர் இளைஞர்- வீடியோ

2018-01-24 4,564

ரயில் தண்டவாளத்தில் படுத்து காஷ்மீர் வாலிபர் சாகசம் செய்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தண்டவாளத்தில் குப்புற படுத்துள்ள அந்த வாலிபர் ரயில் மேலே செல்லும்வரை அப்படியே இருக்கிறார். ரயில் சென்றதும் எழுகிறார். இதை பார்ப்பவர்களுக்கே நெஞ்சம் திக், திக் என்கிறது. இந்த காட்சிகளை வேறு ஒருவர் வீடியோ எடுப்பதை போல தெரிகிறது.

இந்த வீடியோ காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது. தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைக்க முடியுமா என்ற கேள்விக்கு இது விடை தருவதாக அமைந்தபோதிலும், சற்று பிசகினாலும், உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடும் சாகசம் இது. இந்த வீடியோவை பார்த்து வேறு யாரும் இவ்வாறு செய்துவிட கூடாது என்பதால், அந்த வாலிபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பது குறிப்பிடத்தக்கது.

A video of a death-defying stunt by a Kashmiri man, in which he lies on a railway track while a speeding train passes over him, has taken the social media by storm, prompting calls for strict action to prevent it from becoming a trend.

Videos similaires