வருமான வரித்துறையிடமிருந்து தப்பிக்க சசிகலா போட்ட பிளான்- வீடியோ

2018-01-24 3,009

வரி ஏய்ப்பு வழக்கில் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு தான் மவுன விரதம் இருப்பதாக சசிகலா பதில் கடிதம் எழுதி இருக்கிறார். இதனால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐடி துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தில் சசிகலாவின் சொந்த பந்தங்களை குறி வைத்து ஆபரேஷன் கிளின்மணி என்ற மெகா ரெய்டு அரங்கேறியது.

சுமார் 5 நாட்கள் நடைபெற்ற இந்த ரெய்டின் போது சசிகலாவின் அங்காளி பங்காளி முதல் ஜோசியர் வரை என அனைவரையும் தோண்டித் துருவியது வருமான வரித்துறை. சசிகலா சிறை செல்லும் முன்னர் தன் பெயரில் இருக்கும் சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியாவிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். இதனால் சசிகலாவின் அண்ணன் வாரிசுகளான கிருஷ்ணப்ரியா, விவேக்கிடம் வருமான வரித்துறையின் லென்ஸ் பார்வை ஆழமாக இருந்தது.

வருமான வரி சோதனை முடிந்து ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள் சுமார் 300 பேரை விசாரணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் சசிகலாவின் அறை, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பென்டிரைவ், லேப்டாப் மற்றும் மூட்டை மூட்டையான கடிதங்களையும் அள்ளிச் சென்றனர்.

Sasikala replied to Income tax department officials that she is undergoing silent fasting, so IT officials considering of postponding their investigation after February 10.