அனைவருக்கும் பொற்காசுகள் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!- வீடியோ

2018-01-23 4,125

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் 'மகாநதி'. தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்தப் படம் தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா பத்திரிக்கை நிருபர் வேடத்தில் நடித்துள்ளார். துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்க, பிரகாஷ்ராஜ் ஒரு கதாசிரியராக நடிக்கிறார். நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சாவித்ரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ், தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்க காசுகளை பரிசாக கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு சாவித்ரி பற்றிய பல அரிய தகவல்களை அவருடன் பணியாற்றிய சீனியர் கலைஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் கீர்த்தி சுரேஷ். நடிகை சாவித்ரி எப்போதும் தன் படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு தங்கக் காசுகளை அன்பளிப்பாக கொடுத்த விஷயத்தையும் தெரிந்து கொண்டாராம்.
படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்தாலும், தற்போது சாவித்ரியின் குணத்தை உண்மையாகவே நிஜ வாழ்க்கையிலும் செய்துகாட்டியிருப்பதால் பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷை மனதார வாழ்த்தியுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அசந்துபோயுள்ளனர்.


'Mahanati' is the bio pic of actress Savitri. Keerthi Suresh plays the role of Savitri in this film. Keerthi Suresh, who knew gold coin was awarded to everyone by savitri during the shooting of an old film, has recently gifted gold coins to Mahanati shooting team.

Videos similaires