உலகில் தடை செய்யப்பட்ட பகுதியின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள்- வீடியோ

2018-01-23 258

தொழில் நுட்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் மனிதன் ஆரோக்கியமான வளர்ச்சியை பெறுவான். ஆனால் மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுயநலத்திற்காகவே, சுயலாபத்துடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அசுரத்தனமான வளர்ச்சிகண்டு வரும் அதே சூழ்நிலையில், வீழ்ச்சியையும் கண்டு கொண்டிருக்கிறோம். இப்போது நமக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய வரப்பிரசாதம் இணையம் தான். இணையத்தின் உதவியுடன் எத்தகைய தகவலையும் பெற முடியும். அதே சமயம், உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து உங்களுக்கென ஒரு தனி வட்டத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. செய்திகளை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமா? செய்திகள் நடந்த இடத்திற்கு செல்ல வேண்டாமா?

அதற்காகத்தான் இருக்கிறது ட்ரோன் டெக்னாலஜி. இதன் மூலமாக மனிதர்களால் செல்ல முடியாத, பெருமாபத்தான இடங்களில் கூட இந்த ட்ரோன் நுழைந்து படங்களை பிடித்துக் கொண்டுவருகிறது. உலகம் முழுவதும் இந்த ட்ரோன் டெக்னாலஜி மூலமாக எடுக்கப்பட்ட படங்கள் உங்களுக்காக தேடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்போது நீங்கள் பார்த்த இந்த படம், சிரியாவின் மிகப்பெரிய நகரங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் அரசாங்கத்திற்கும் எதிர் அணியினருக்கும் நடந்த குண்டு வீச்சு மற்றும் போரில் முற்றிலுமாக நாசமடைந்தது இந்த நகரம். இங்கிருக்கும் பெருபாலானோர் கொல்லப்பட்டனர் மீதம் இருப்பவர்களோ உயிருக்கு அஞ்சி வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து சென்று விட்டனர்.


Forbidden Areas Around The World

Videos similaires