ரசிர்கர்கள் மத்தியில் கமல் பேச்சு!- வீடியோ

2018-01-23 2,998

மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கி பயணிக்காமல் மக்களின் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கிறோம், அது நமக்கு நிச்சயம் வெற்றியைத் தரும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் ரசிர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் கமல் பேசியதாவது : சிவகாசி, தேனி,ராசிபுரம், தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் வந்திருக்கும் எனது குடும்பத்தாருக்கு நன்றி. இதற்கு முன்னர் அடிக்கடி நாம் கூடி பேசி இருந்தாலும், இன்ற சற்றே இலக்கு மாறி கூடி இருக்கிறோம். லட்சியம் என்பது ஒன்று தான் மக்களை நோக்கிய ஒரு பயணம் தான் இது. இந்தப் பயணத்தை தொடங்கி நீண்ட நாட்களாகிறது, 37 வருடங்களாக எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்காமல் என்னுடன் பயணம் செய்தவர்கள் நீங்கள்.இப்போது எதை நோக்கி போகிறோம் என்று பதற்றப்படுவோருக்காக சொல்கிறேன்,நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம். அது எப்படி வெற்றி என்று சொல்லலாம் கர்வம் இல்லையா என்று கேட்கலாம். கர்வம் இல்லை இதில் அவையடக்கம் இருக்கிறது. நம்முடைய இலக்கு என்பது மற்றவர்களைப் போல கஜானாவை நோக்கியல்ல, மக்களின் முன்னேற்றத்தை நோக்கி. அது சிறந்த அளவில் இருக்க வேண்டும் என்பதே நமது

நம் வெற்றி மிக நீளமானது அதே போன்ற நம் பாதையும் நீளமானது தான். இதற்கு முன் நடந்த கூட்டங்களில் கூட உங்கள் சாதி என்ன மதம் என்ன என்ற கேள்வி எழுந்ததே கிடையாது, இனியும் அப்படித் தான் இருக்கும். ஆனால் இதற்கு முன்னர் நீங்கள் எந்த கட்சி என்று நான் கேட்டது கிடையாது, இனி கேட்பேன்.




Actor Kamalhaasan says that his decision to move towards People is for their development and definitely he and his fans club will succeed in it as they were doing it over 37 years without any expectations.

Videos similaires