ஏன் இரு சக்கர வாகனம் இப்போது கொடுக்க வேண்டும்-செல்லூர் ராஜூ பதில்- வீடியோ

2018-01-23 3,050

நிதி நெருக்கடி இருந்தாலும் பெண்களுக்கு மானிய விலை இரு சக்கர வாகனம் வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்படாமல் இருக்கவே ஸ்கூட்டர் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பஸ் டிக்கெட் கட்டணம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, ரேசன் கடைகளில் உளுந்தம்பருப்பு அல்லது துவரம்பருப்பு ஏதாவது ஒரு பருப்பு மட்டுமே தரமுடியும் என்றார். இரண்டு பருப்புகளுமே ரேசன் கடைகளில் தரமுடியாது என்றும் கூறினார் செல்லூர் ராஜூ. நாட்டிலேயே அதிக அளவில் பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுவதாகவும் கூறினார். கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டமான மானிய விலை இருசக்கர வாகனம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.


Tamil Nadu Minister Sellur Raju has reportedly announced that the government won't be giving urad dal in ration shops. He said, government is getting ready to realise a promise by late chief minister and AIADMK supremo J Jayalalithaa, to provide subsidy for working women to buy two-wheelers.

Free Traffic Exchange

Videos similaires