இந்த ஐ.பி.எல் சீசனில் ஏலத்தில் டாப் ரேஸில் இருக்கும் வீரர்கள்- வீடியோ

2018-01-23 2,051

உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய டி-20 லீக்தான் இந்த ஐபிஎல் போட்டி. உலகில் இருக்கும் முக்கிய வீரர்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்கிறார்கள். முக்கியமாக அடுத்த வருடத்தில் இருந்து ஐபிஎல் நடக்கும் சமயத்தில் வேறு எந்த கிரிக்கெட் தொடரும் நடக்காது என்று கூறப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு ஐபிஎல் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் வரும் 27 மற்றும் 28 தேதிகளில் பெங்களூரில் நடக்க உள்ளது. இதில் சில வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் முயற்சி எடுத்து வருகிறது.

சென்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக குல்தீப் யாதவ் விளையாடினார். இந்த முறை இவருக்கு 1.5 கோடி ரூபாய் குறைந்தபட்ச தொகை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வருடம் முழுக்க ஸ்பின் பவுலிங்கில் இவர் காட்டிய வித்தியாசமும் வேகமும்தான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது

2017 ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணி அவரை வாங்கியது. இந்த முறை இவர் மீண்டும் ஏலத்திற்கு வருகிறார். இவருக்கு குறைந்தபட்ச தொகையே 2 கோடியாக விதிக்கப்பட்டு இருக்கிறது.

The Indian Premier League auction will be held on January 27 and 28 in Bengaluru and it will be the first time 578 players would be up for sale while 18 have already been retained. The IPL Governing Council has introduced the Right-to-match (RTM) concept for the 2018 auctions.