பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தொடரும் மாணவர்களின் போராட்டம்

2018-01-23 5

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பஸ் கட்டணம் கடந்த சனிக்கிழமை முதல் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை சிறைபிடிப்பது, மறியல் செய்வது உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்லூரி நுழைவாயிலில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். கல்விக்கட்டணம் கட்டவே சிரமமாக இருப்பதால் பஸ் கட்டணம் பெரும் சுமையாக இருப்பதாக மாணவிகள் கூறியுள்ளனர்.

கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாபஸ் வாங்கு... வாபஸ் வாங்கு.... கொள்ளையடிக்காதே என்று மாணவ, மாணவிகள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஏழ்மையான சூழ்நிலையில் கிராமத்தில் இருந்து வந்து படித்து வருவதாக கூறினர்.

College Students across various districts of the TamilNadu seconday to protest against the bus fare hike announced by the government.

Free Traffic Exchange

Videos similaires