3 நாட்களாக அமெரிக்க நிர்வாகம் செயல்படாமல் முடங்கி இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் தற்போதுதான் அமெரிக்க அரசாங்கம் முடங்கி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிடிவாதமான குணமும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறது.
அங்கு இருக்கும் இந்தியர்களும் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
தற்போது அமெரிக்க அரசு முடங்கி இருக்கிறது. இதனால் அரசு நிர்வாகம், அலுவலகம், கடைகள் எதுவும் இயங்காது. சுற்றுலாதளம் கூட இயங்காது. மருத்துவமனைகள், காவல்துறை, தீயணைப்புத்துறை போன்ற அவசர விஷயங்கள் மட்டும் செயல்பாட்டில் இருக்கும். கிட்டத்தட்ட இந்தியாவில் நடக்கும் முழு பந்த் போன்றது.
The US government officially shutdown saturday for the first time in five years after the Senate rejected a short-term spending bill to keep the federal government running, marking a chaotic end to Donald Trump's first year as president.