ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு தலையீடாக இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகனிடம் ஆளுநர் ஆய்வு நடத்தியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ஆளுநர் சிறப்பாக செயல்பட்ட துறைகளின் அதிகாரிகளை மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என ஊக்கப்படுத்தியதாக குறிப்பிட்டார். மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமான நல்லுறவுடன் இருந்ததால்தான், பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள முடிகிறது என்றும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பேருந்து கட்டணம் தமிழகத்தில் தான் குறைவு என்றும் அமைச்சர் தெரிவித்தார். .
Des : KP Anbazhagan said that Governor Panwarilal Purohit's study was not interfering with state autonomy.