பேருந்து கட்டண உயர்வை சமூக வலைதளங்களில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ

2018-01-22 1

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

தமிழக அரசு பேருந்து டிக்கெட் கட்டணத்தை அண்மையில் பாதிக்கும் மேலாக உயர்த்தியத. இதனைத் தொடர்ந்து வசதியானவர்கள் தான் பஸில் பயணிப்பார்கள் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் கலாய் கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து கட்டணமாக செலுத்தியே மொத்த பணமும் செலவாகிவிட்டதாகவும் கருத்துகள் எழுந்து வருகின்றன. இப்படி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பேசாமல் ஸ்ட்ரைக்கே தொடர்ந்திருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குடும்ப வாகனங்கள் என சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகீரப்பட்டு வருகின்றன.

பஸ் கட்டண உயர்வால் குடும்ப வாகனம் அறிமுகம் என்ற பரவி வரும் இந்த வீடியோவில் 10 பேருக்கும் மேலாக அமர்ந்து செல்லும் வகையில் இருசக்கர வாகனம் போன்ற டிசைனில் நீண்ட சீட் அமைக்கப்பட்ட ஒரு வாகனம் வளைத்து வளைத்து காட்டப்படுகிறது.

Free Traffic Exchange

Videos similaires