கமல்ஹாசன் அடுத்த அரசியல் அதிரடி அறிவிப்பு- வீடியோ

2018-01-22 7,793

பிப்ரவரி 24ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 4 மாநில நற்பணி மன்றத்தினருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு கமல் வெளியிட்ட அறிவிப்பில் பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.பிப்.21ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாக கமல் ஏற்கனவே அறிவித்திருந்தார். அன்றே தனது கட்சி பெயரை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 24ம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த அவர் முடிவு செய்துள்ளார். 21ம் தேதி முதல் சில மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்த பிறகு 24ம் தேதி மதுரையில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்துடன் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை கமல் நிறைவு செய்கிறார். பிப்ரவரி 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் 'நமது அம்மா' நாளிதழ் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




On February 24, a public meeting will be held in Madurai, actor Kamal Haasan announced. Kamal Hassan has discussed with Madurai, Ramanathapuram, Sivagangai and Dindigul districts fans at his residence in Alwarpet.

Videos similaires