விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை- வீடியோ

2018-01-22 4,781

தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். விஷால், சமந்தா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் இரும்புத்திரை. புதுமுகம் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மித்ரன் முதல் படத்திலேயே சிறப்பாக இரண்டு வேலைகள் செய்துள்ளார். சிறப்பாக படம் எடுத்துள்ளார். மேடையில் பேசவும் தெரிந்து வைத்துள்ளார். எனக்கு மேடை ஏற 20 ஆண்டுகள் ஆனது. பாரதிராஜாவை சந்தித்த பிறகே எனக்கு மேடை ஏறும் தைரியம் வந்தது. தமிழ் ராக்கர்ஸை எதிரியாக பார்ப்பதை விட நண்பனாக பார்த்தால் நன்றாக இருக்கும் என்று நான் விஷாலுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். மறுவாரம் போட்டான், மறுநாள் போட்டான், இன்று ரிலீஸ் அன்றே போடுகிறான். விரைவில் ரிலீஸுக்கு முன்பே போடும் சூழ்நிலை வந்துவிடும் போன்று. ஏன் என்றால் தமிழ் திரைப்படத் துறையிடம் இருந்து ஜி.எஸ்.டி. வாங்கும் அரசாங்கங்கள் அதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்றார் செல்வமணி.

Director RK Selvamani has requested Vishal to consider Tamil Rockers as a friend rather than an enemy. He said so in the audio launch function of Vishal's upcoming movie Irumbuthirai.

Videos similaires