ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் என மக்கள் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சை பற்றி கவிஞர் வைரமுத்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் தான் கூறிய கருத்து திரித்து வெளியிடப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா என்றும் வைரமுத்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஆண்டாளின் புகழ்பாட நினைத்தது தவறா? எனக்கேட்கிறார் கவிஞர் வைரமுத்து என்ற தமிழிசை ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் தவறு என்கின்றனர் மக்கள் என தெரிவித்துள்ளார்.
ஆண்டாளின் புகழ்பாட நினைத்து இகழ் பாடியதுதான் என மக்கள் கூறுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து எழுந்த சர்ச்சை பற்றி கவிஞர் வைரமுத்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார்.
Tamil Nadu BJP leader Tamilisai has tweeted about Vairamuthu Video. She told Vairamuthu was thinking to sing Andal's fame but he did mistake by sung shame about Andal