மும்பையில் தனியார் கப்பலில் பணிக்கு சேர்ந்த நான்கு மாதத்திலேயே தமிழக அதிகாரி உடல் கருகி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி வடக்கு ராஜதெருவை சேர்ந்தவர் பர்னாந்து. கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான எம்டி ஜெனிசா என்ற டேங்கர் கப்பலில் எலக்ட்ரிகல் பிரிவில் முதன்நிலை அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.
இந்த கப்பல் கடந்தசில நாட்களுக்கு முன்பு 30 ஆயிரம் டன்டீசலுடன் குஜராத் மாநிலம் காண்டலா துறைமுகத்திற்கு சென்றுள்ளது. கப்பல் துறைமுகம் அருகே வந்த போதுகப்பல் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னாந்து உள்பட 2 பேர் காயம்அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இரவு பர்னாந்து சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். இதுகுறித்து உடனடியாக பர்னாந்து தந்தைக்கு கப்பல் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இந்த தகவலை கேட்டஅவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பர்னாந்து உறவினர்கள் குஜராத்துக்கு புறப்பட்டு சென்று அவரதுஉடலை இன்றுதூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
Young Officer Died in a Fire Accident Which took place in the Oil Tanker Ship. The Officers funeral will take place in his home town Thoothukudi. And FIR is filed regarding the Ship fire Accident.