ரஜினியை தாக்கிப் பேசிய பாரதிராஜா

2018-01-19 259

ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவே வைத்து விட்டாரா என்று ரஜினிகாந்துக்கு பாரதிராஜா மறைமுகமாக சாடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ஆண்டாள் குறித்து வைரமுத்து அவதூறாக பேசியதாக அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதனால் ஜீயர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் வைரமுத்துவின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் அவரை கொலை செய்யலாமா என்றும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் நெல்லையில் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கடவுள் 2 என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற போது பாரதிராஜா பேசுகையில், ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவே வைத்து விட்டாரா என்று கூறினார். வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்திருக்கலாமே? என்றும் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி பேசாதது ஏன்? என்று கேட்டுள்ளார்.

ஆட்சியை பிடிக்கத்தான் ரசிகர்களை அடக்காமல் அடிமுட்டாளாகவே வைத்து விட்டாரா என்று ரஜினிகாந்துக்கு பாரதிராஜா மறைமுகமாக சாடியுள்ளார்.


Director Bharathiraja in an audio release function condemns Rajinikanth indirectly that all because of coming to power in TN, he failed to control his fans.

Videos similaires