பாலியல் தொல்லை பற்றி பேசினால் நடிகைகளின் கெரியர் நாசமாகிவிடும் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ஆர். பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்மேன் படம் வரும் 25ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கன்னா தயாரித்துள்ளார். இந்நிலையில் ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
பாலியல் தொல்லை பற்றி ஏன் யாரும் பேசுவது இல்லை என்றால் தைரியமாக பேசினால் அவர்களின் கெரியர் நாசமாகிவிடும். அவர்களின் கனவு கனவாகவே போய்விடும் அதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.
Bollywood Radhika Apte has talked about sexual harassment in Bollywood. She said that, 'the reason why people don't speak up is because they know their careers will get ruined and the dream that they had for so long.'