தலைவர் ரஜினியை சந்திக்கும் தல தோனி

2018-01-19 67

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் திரும்பியுள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி இன்று சென்னை வந்துள்ளார். சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி என்று குஷியாக தெரிவித்துள்ள அவர் இன்று இரவு போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக சூதாட்ட புகார் காரணமாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது இந்த ஆண்டோடு முடியும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கிறது. அணிக்கு டோணி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் திரும்பியுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் டோணி இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னைக்கு திரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக டோணி மகிழ்ச்சி தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வினை ஏலத்தில் எடுக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் டோணி கூறினார். இதனிடையே சென்னை வந்துள்ள டோணி இன்று இரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியை அவரது வீட்டில் சந்திக்க உள்ளார். டோணி அன்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியான சமயத்தில் டோணி ரஜினியை சந்தித்திருந்த நிலையில், இன்று மீண்டும் ரஜினியை சந்திக்கிறார் டோணி. டோணி ரஜினியின் சந்திப்பு இரண்டு தரப்பு ரசிகர்களையும் குஷியாக்கியுள்ளது.

Mahendra singh Dhoni who is at Chennai today is going to meet Rajini at his Poes garden residencce tonight, the two ccaptains meeting turns happiest moment to their fans.

Videos similaires