அரசியலில் இருந்து விலக போவதாக எம்.எல்.ஏ. கருணாஸ் சூசக அறிவிப்பு

2018-01-19 6,326

அரசியல் தமக்கு செட் ஆகாது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். வேடசந்தூரை அடுத்த மாரப்பாடியில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் திருவாடானை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக இரண்டாக பிரிந்து செயல்படுவது வேதனை அளிக்கிறது என்றார். மேலும் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக எப்படி இருந்தது தற்போது எப்படி உள்ளது என்றும் தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

தன்னைபோன்ற எதார்த்தவாதிகளுக்கு அரசியல் ஒத்துவராது என்றும் கருணாஸ் கூறினார். தமக்கு அரசியல் செட்டாகாது என 2016ஆம் ஆண்டிலேயே முடிவு செய்துவிட்டதாகவும் கருணாஸ் கூறினார்.
அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் மாற்றி மாற்றி பேசுவது தமக்கு சரியாக வராது என்றும் அவர் கூறினார். கனவில் கூட பொய் சொல்லக்கூடாது என்பதுதான் தனது தத்துவம் என்றும் அப்படிதான் தன்னை தனது பெற்றோர் வளர்த்ததாகவும் அவர் கூறினார்.

இது நமக்கு செட்டாகாது என்ற அவர் மீண்டும் முழுநேர சினிமாவில் இறங்கயிருப்பதாகவும் சூசகமாக கூறினார். கருணாஸின் இந்த பேச்சு அவர் விரைவில் அரசியலுக்கு முழுக்கு போடவுள்ளார் என்பதையே காட்டுகிறது.

Actor and MLA of Thiruvadanai constituency Karunas plans to leave from Politics. In a church function he has said this indirectly.