நீங்கள் இப்படி செய்தால் நான் உள்ளேயே இருக்க வேண்டியது தான்... குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம்

2018-01-19 1

தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இனியும் என் பேச்சை கேட்காவிட்டால் நீங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும் என எச்சரித்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பின்னர் தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

டிடிவி தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாள்தோறும் ஏதாவது பேசி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தினரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடையேயும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் சசிகலாவின் தம்பி திவாகரன் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும், அப்போது மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது என்றும் அந்த கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது என்றும் கூறினார்.

Sasikala has written a letter to the family members in Tamil Nadu. She has warned that if you do not listen to me anymore you will lose everything you've got. The letter given to Sasikala husband Natarajan, Sasikala brother Diwakaran, Diwakaran son Jai Anand and TTV Dinakaran

Videos similaires