நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல, பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ஆனந்த் ஹெக்டேவிற்கு எதிரானவன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். என்னை இந்துக்களுக்கு எதிரானவன் என்று கூறும் அவர்கள் இந்துக்களே இல்லை என்றும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், பாஜக என் மீது வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு என்பது நான் காங்கிரஸ் அரசிடம் இருந்து கர்நாடகாவில் ஒரு எச்எஸ்ஆர் நிலத்தை வாங்கினேன் என்பது தான்.
எனக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. 30 வருடங்களாக 5 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்துள்ளேன். இதற்காக நான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறேன் என்று தெரியுமா. என்னுடைய வருமானம் என்னவென்று என் மீது குற்றம்சாட்டுபவர்களுக்குத் தெரியுமா?
நான் ஒரு கிராமத்தை தத்தெடுத்திருக்கிறேன், அங்கு 6 ஏக்கர் நிலத்தை பள்ளி கட்டுவதற்காக அளித்துள்ளேன். அண்மையில் என்னுடைய 2 ஏக்கர் நிலத்தை ஒரு சமுதாய நலக்கூட கட்டுமான பணிக்காக இலவசமாக அளித்துள்ளேன். என்றாலும் எனக்கு பெங்களூரில் ஒரு இடம் தேவைப்பட்டது.
Actor Prakashraj blasted at India today concalve at Hyderaad that he is not anti Indian, he is anti Modi, Amitsha and Anand Kumar hegde.